அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. மனம் திறந்து பேசிய மௌனிகா..!
Author: Vignesh15 April 2024, 4:32 pm
1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த உன் கண்ணில் நீர் வடிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மௌனிகா.
சினிமா பெயரில் பல சாதனைகளை படைத்த பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலாகவே இருந்தது. மூன்று திருமணங்களை செய்தார். முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் சில பல காரணங்களால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த உறவில் இருந்தபோதே நடிகை மௌனிகாவையும் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க: சினிமாவில் நடிப்பதில் துளியும் விருப்பமில்லை.. அஜித் குறித்து வெளிப்படையாக பேசிய பிரபல இயக்குனர்..!
இவர் பாலு மகேந்திரா மீதும் சினிமா மீதும் காதல் வயப்பட்டதால் 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு இவர்கள் திடீரென பிரிந்து அதிர்ச்சியை கொடுத்தனர்.
இதனை அடுத்து இவர்கள் பிரிந்த நிலையில் சில வருடங்களில் பாலு மகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். இந்நிலையில், மௌனிகா பாலு மகேந்திரா குறித்து பேட்டி ஒன்றில் மிக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதாவது பாலு மகேந்திரா ஒரு கடிதம் ஒன்றை மௌனிகாவிற்காக எழுதியுள்ளார். அதில் தன்னுடைய வயோதிக சுமையை உன்னிடம் தினிக்க விரும்பவில்லை என்றும், அதனால் நாம் பிரிந்து விடுவோம் என்றும், எழுதியிருந்ததாக மௌனிகா தெரிவித்துள்ளார். ஆனால் இதைப் பற்றி கூறிய மௌனிகா வயோதிகம் என்ற காரணம் எல்லாம் இருந்திருக்காது எனவும், தன்னை யாராவது ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தினால் தான் அவர் பிரிந்திருப்பார் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் பாலு மகேந்திரா இவ்வாறு செய்தது மிகப்பெரிய தவறு என்றும், தன்னால் அவரை மன்னிக்கவே முடியாது எனவும், அவர் ஆன்மாவை கூட தன்னால் மன்னிக்க முடியாது என்றும், இப்போது வரை எந்த காரணமும் சொல்லாமல் போய்விட்டாரே என்று கவலையாக இருப்பதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும், பாலு மகேந்திரா இறப்பதற்கு முன்பு தன்னிடம் இரண்டு சத்தியம் வாங்கியதாகவும், ஒன்று படம் பண்ண வேண்டும் என்றும் கூறினார். இன்னொரு சத்தியம் என்னவென்றால், இறந்த பின்பு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டும். உனக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சத்தியம் வாங்கினார். ஆனால், நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. என் மனம் அதற்கு ரெடியாகணும், ரெடியாகாமல் ஒருவரை கல்யாணம் செய்து அவருக்கு சரியாக இருக்காது. எனக்கும் சரியாக இருக்காது. அது இன்று ரெடியாகலாம், ஒரு வருடம் ஆகலாம், ஆகாமலும் போகலாம்.
மேலும் படிக்க: ஜாம் ஜாம்னு நடந்து முடிந்த இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம்.. நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்..!
படத்தில் நடிக்கிறேன் ஆனால், கல்யாணம் பண்ணிப்பேன் என்று சத்தியம் செய்து கொடுக்க மாட்டேன் என்று பாலு மகேந்திராவிடம் கூறிவிட்டேன். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவது வேற, இன்னொரு வாழ்க்கை அமைத்துக் கொள்வது என்பது வேற, இன்னொருத்தருடைய புருஷனை பங்கு போட்டது தப்புதான். ஆனால், அந்த தப்பான வாழ்க்கையை சரியாக நான் வாழ்ந்தேன். அவருக்கு கொடுக்க வேண்டிய எல்லாம் மரியாதையும் நான் கொடுத்தேன். எனக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதையும் அவர் கொடுத்தார். அப்படி வேறொருவரை அவர் இடத்தில் பொருத்திப் பார்க்க முடியாது. ஆண் பெண் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை, அதை மீறி வாழ்க்கை இருக்கிறது என்று எமோஷனலாக பேசியுள்ளார்.
0
0