புடிச்சாலும் புளியம் கொம்புதான்.. அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்த ஹீரோக்கள்..!

Author: Vignesh
15 April 2024, 5:20 pm
heros
Quick Share

பொதுவாக ஹீரோக்களை பொறுத்தவரையில் சினிமாவை சார்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து விடுவார்கள். அப்படி திருமணம் செய்து கொண்டாலும், சினிமாவிலிருந்து விலகி விட வேண்டும் என்று நடிகைகளிடம் கூறி கல்யாணத்தை செய்து கொள்வார்கள். அதை ஒரு சில நடிகைகள் மட்டுமே ஏற்பார்கள். பலர் சினிமாவை சார்ந்தவர்களையே திருமணம் செய்து கொள்வார்கள்.

அந்த வகையில், தங்களை விட அதிக வசதி படைத்த பெண்களை திருமணம் செய்து பெரிய இடத்து மாப்பிள்ளையான ஹீரோக்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நடிகர் பிரபுவின் மகளும் சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் விக்ரம் பிரபுவின் குடும்பத்தார் பார்த்து முடிவு செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட விக்ரம் பிரபுவின் மனைவி லட்சுமி பிரபுவின் நெருங்கிய நண்பரின் மகளாம். அதிலும், சேலத்தில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் கல்லூரி மற்றும் பல நிறுவனங்களுக்கு முதலாளியாக இருந்தவரின் மகள் தானாம்.

vikram prabhu wife

நடிகர் தனுஷ் தன் குடும்பத்தை விட பெரிய இடத்து பெண்ணாக அதுவும் சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகளுக்குப் பின் தற்போது விவாகரத்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

dhanush - updatenews360

விஜயகுமாரின் மகனான அருண் விஜய் ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து வைத்து திருமணம் செய்து கொண்ட அருண் விஜயின் மனைவியின் அப்பா தொழிலதிபராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

arun-vijay-wife

மேலும் படிக்க: ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!

லண்டன் வாழ் தொழிலதிபரின் மகள் சங்கீதாவை நடிகர் விஜய் திருமணம் செய்து இருக்கிறார். தான் சம்பாதிக்கும் சொத்தை மாமனாரிடம் கொடுத்து இன்வெஸ்ட்மெண்ட்டும் செய்து வருகிறார் விஜய். ஆனால், சில ஆண்டுகளாக விஜய் சங்கீதாவை விட்டு பிரிந்து வாழ்வதாக தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆரத்தி தேன் ஆண்டாள் நிறுவனத்தின் மேலாளராக இருந்து வருகிறார். தாய் சுஜாதா சின்னத்திரை சீரியல்களையும் ஒரு சில படங்களையும் தயாரித்து வருகிறார். ஆரத்தி குடும்பம் ஜெயம் ரவி குடும்பத்தை விட அதிக அளவு வசதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

தன்னைவிட 17 வயது குறைவான நடிகையை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆர்யா. சாய்ஷாவின் குடும்பம் இந்தியாவிலேயே மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பவர்கள். சாய்ஷாவின் அம்மா அப்பா இருவரும் பாலிவுட் திரை உலோகத்தில் முக்கிய பிரபலங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

sayyeshaa

காதலித்து திருமணம் செய்ய விடாமல் கார்த்தியை தான் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார் நடிகர் சிவகுமார். கார்த்தியின் மனைவி ரஞ்சனி ஈரோட்டை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரின் மகளாம். சிவக்குமார் குடும்பத்தை விட அதிக நிலம் மற்றும் பூர்வீக சொத்துக்கள் கொண்டவர் கார்த்தியின் மனைவியின் தந்தையாம்.

karthi wife
Views: - 87

0

0