இறுதி நாட்களில் சிவாஜி அனுபவித்த கொடுமைகள்… நேரில் சென்று கதறி அழுத பிரபல நடிகை!

Author: Rajesh
18 December 2023, 12:01 pm
sivaji
Quick Share

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

sivaji padayappa-updatenews360

வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.

sivaji ganesan-updatenews360

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது.

சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படும் சிவாஜி கணேசன் சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் பாசம், ஏமாற்றம், குடும்பம், பிரிவு என மிகவும் எமோஷனலான கதாபாத்திரங்களில் கருத்து பேசி அழுதுக்கொண்டே நடிப்பது இவருக்கே உரித்தான திறமை.

இந்நிலையில் சிவாஜி கணேசனின் இறுதி நாட்களில் அவரின் கோர நிலைமை குறித்து தகவல்கள் தற்ப்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆம், சிவாஜி கடைசி காலத்தில் உடல் மெலிந்து அடையாளமே தெரியாத அளவிற்கு படுத்த படுக்கையாக இருந்தாராம். அப்போது அவரை சந்திக்க பத்மினி வீட்டிற்கு சென்றுள்ளார்.

பதமினிக்கு பிடித்த உணவுகளை சமைக்க சொல்லி ஆர்டர் போட்டாராம் சிவாஜி. பின்னர் பதமினி வந்ததும் மேல்மாடியில் இருந்து அவரை 4 பேர் தூக்கிக்கொண்டு வந்தார்களாம். டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை ஒன்று கூட எடுத்து சாப்பிட முடியாத கோரநிலையில் சிவாஜி இருந்தாராம். அதை பார்த்து கதறி அழுத பதமினி உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று சாப்பிடக்கூட முடியாமல் ஓடிவந்துவிட்டாராம்.

அக்காலத்தில் – சிவாஜி – பத்மினி ஜோடி என்றால் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர்கள். அவர்கள் இருவரும் காதலித்ததாக கூட செய்திகள் வெளியாகியது. ரசிகர்களும் அவர்கள் உண்மையிலே திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டார்களாம். பின்னர் சிவாஜி தனது உறவுக்கார பெண்ணான கமலாவை திருமணம் செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 304

0

0