அமீரை எப்ப போட்டு தள்ளுவ.. என்னைய கொலைகாரின்னு சொல்றாங்க பாவனி எமோஷனல்..!
Author: Vignesh18 மார்ச் 2024, 6:33 மணி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.
பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.
அதற்கு ஓகே சொன்னதே பாவினியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார். இவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
இப்படியான நேரத்தில், இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டு உள்ள நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பாவினி கலந்து கொண்டார். அதில், என்னை விரும்புவர்களுக்கு நான் அதிகமான அன்பை கொடுப்பேன். என்னைப் பற்றி யோசிப்பதை விட அவர்களை பற்றி தான் நிறைய விஷயங்களை யோசிப்பேன்.
எனது முன்னால் கணவர் தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டு, நான் தான் அவரை கொலை செய்தேன் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். இதற்கு விளக்கம் கொடுக்க நினைத்தது இல்லை. காரணம் அது கடந்து சென்றுவிடும் என்று எனக்கு தெரியும். இப்போ நான் அமீருடன் இருக்கும் பொழுது கூட அடுத்ததாக, அமீரை கொலை செய்ய போகிறீர்களா என்று கேட்கிறார்கள்.
எனது, முன்னால் கணவரும் நானும் எத்தனை வருடங்கள் காதலித்தோம். எந்த மாதிரி அன்பை வெளிப்படுத்திக் கொண்டு என யாருக்கும் தெரியாது. இது போன்ற விஷயங்களை நான் பேசும் பொழுது எனக்கு அழுகை வந்துவிடும். பொதுவெளியில், நான் அழாமல் இருக்கலாம். ஆனால், தனியாக சென்று அழுது விட்டு தான் வருவேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.
0
0