எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. அடுத்த படத்திற்கு மாஸாக தயாராகிய ஆர்யா..!

Author: Vignesh
18 March 2024, 6:51 pm
arya
Quick Share

இளம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா கட்டுமஸ்தான உடல் தோற்றம், மிரட்டலான body language என ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பரீட்சியமனார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.

2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அழகான ஒரு மகளும் இருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ படத்தில் கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடினாலும் பெரிதாக பேசப்படவில்லை. அந்த படத்திற்காக ஆர்யா ரூ.14 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின்னர் தான் சம்பள உயர்வு ஆனதாக கோலிவுட் செய்திகள் கூறுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான எனிமி, கேப்டன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், நடிகர் ஆர்யா எப்போதும் பிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் ஒர்க் அவுட் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான் அதிகமாக பகிரப்பட்டு இருக்கும்.

arya

ஜிம் வொர்க் அவுட் மட்டுமின்றி நீண்ட தூரம் சைக்கிள் பயணம் அடிக்கடி செல்வதை ஆர்யா வழக்கமாக வைத்திருப்பவர். ஆரியா தற்போது மிஸ்டர் X என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக கடந்த ஒரு வருடத்தில் தீவிர ஒர்க்கவுட் செய்த அவர் ஆச்சரியப்படுத்தும் வகையில் உடற்கட்டுடன் மாறி இருக்கிறார். அந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் ஆரியா 2023 மார்ச்சில் மிஸ்டர் எக்ஸ் படம் உறுதியானது. ஏப்ரல் மாதத்தில் இருந்து நான் இந்த லுக்கிற்காக உடற்பயிற்சி செய்யத் தொடங்கி தற்போது ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என கூறியுள்ளார்.

arya
arya

Views: - 64

0

0