“கமலுடன் சேர்ந்து அந்த காட்சியில் அப்படி பண்ண முடியாது”.. கதறி அழுத பிரபல நடிகை..!

Author: Vignesh
27 January 2023, 5:30 pm
Quick Share

1986-ம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பால் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இப்படத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.
இதில் ரேவதி, ரேகா ஆகியோர் நடித்திருந்தனர்.

punnagai mannan - updatenews360

புன்னகை மன்னன் திரைப்படத்தை இந்த காலகட்டத்திலும் பலராலும் ரசிக்க படுகிறது. இந்த படத்தில் ஒரு நடன கலைஞர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும், கஷ்டத்தை குறித்து மிகவும் அழகாக கூறியிருப்பார்கள்.

punnagai mannan - updatenews360

புன்னகை மன்னன் படத்தில் கமலும், ரேவதியும் சேர்ந்து நடனமாடும் காட்சியை எடுத்து கொண்டிருக்கும் போது, கமலின் நடனத்திற்கு ரேவதியால் ஈடு கொடுக்க முடியவில்லையாம்.

punnagai mannan - updatenews360

இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த கலா மாஸ்டரிடம், என்னால் கண்டிப்பாக கமலுக்கு ஈடு கொடுத்து நடனமாட முடியாது என்று சொல்லி அழுது விட்டாராம். அதன் பின்னர் அவரை சமாதானம் படுத்தி எல்லோரும் நடனமாட வைத்தார்களாம்.

Views: - 226

1

1