வயதில் மூத்த நடிகையுடன் விரைவில் டும் டும் டும்..! ஆனா அந்த விஷயம் இன்னும் நடக்கல.. பசங்க பட கிஷோர் ஓபன் டாக்..!

Author: Vignesh
27 January 2023, 6:30 pm
pasanga padam kishor - updatenews360
Quick Share

நடிகர் கிஷோர் பசங்க படத்தில் நடித்து ஃபேமஸானவர், இவர் தான் காதலித்து வரும் நடிகை ப்ரீத்தி குறித்தும் அவர்கள் திருமணம் குறித்தும், முக்கியமான தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில், வெளியான முக்கியமான படங்களில் ஒன்று பசங்க. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கிஷோர் நடித்து அசத்தியவர். இதற்குப் பின் கோலி சோடா உள்ளிட்ட படங்களில் கலக்கி வந்த நடிகர் கிஷோர், பிரபல சீரியல் நடிகை பிரீத்தி என்பவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தது பெரும் வைரலானது.

pasanga padam kishor - updatenews360

இந்த நிலையில் இவர்கள் இருவர் குறித்த, முக்கியமான தகவல்களை பேட்டியில் நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். அதாவது, இருவரும் சந்தித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும், அதன் நினைவாகத்தான் அந்த போட்டோக்களை வெளியிட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், அவர் தன்னை விட நடிகை ப்ரீத்தி 4 வயது மூத்தவர் என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இரு வீட்டாருக்கும் அது பிரச்சனை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

pasanga padam kishor - updatenews360

ஒரே ஒரு முக்கியமான விஷயத்திற்காக வெயிட் செய்வதாகவும், அது நடந்து முடிந்ததும் இருவரும் திருமணம் குறித்து அறிவிப்பை நிச்சயமாக வெளியிடுவோம் என்றும் ஓபனாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Views: - 229

2

0