ஹோட்டல் பிசினஸ்… கோடியில் வருமானம் – சினிமாவை தாண்டி தொழிலில் கல்லா கட்டும் சிம்ரன்!

Author: Rajesh
11 February 2024, 1:40 pm
Quick Share

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

simran

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. சிம்ரன் சினிமாவை தாண்டி ஹோட்டல் பிசினஸ் ஒன்றை நடத்தி வருகிறார். Godka by Simran எனும் பெயரில் சிம்ரன் Restaurant நடத்தி வருகிறார்.

இந்த ஹோட்டலில் உணவுகளின் விலை கேட்டால் தலை சுற்றுகிறது. ஒரு ஆம்லெட் விலை மட்டுமே ரூ. 300 இருந்து ஆரம்பித்து சாதாரண கார்லிக் பிரெட்டின் விலை 130, பேபிகார்ன் ரூ. 280, சிக்கன் லாலிபாப் ரூ. 280 என எல்லாமே ஹைக்ளாஸ் பட்ஜெட்டில் தான் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சைவ உணவும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ரூ. 1000 ஆகுமாம்.

அதே போல் அனைத்து அசைவ உணவுகள் சேர்ந்த தட்டின் விலை ரூ. 1500 என மெனு கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுத்த நண்டு ரூ. 380’ற்கு விற்கப்படுகிறது. இந்த ஹோட்டல் கடற்கரை சாலையில் இருப்பதால் அங்கு வருபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள் என்பதால் சாதாரணமாகவே நாள் ஒன்றிற்கு 10 லட்சம் வரை வருமானம் வருமாம். ஆண்டிற்கு கோடி கணக்கில் வருமானம் ஈட்டுகிறார் சிம்ரன். சிம்ரன் என்ற பிராண்டிற்காக அந்த ஹோட்டலில் கூட்டமும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 243

0

0