இந்த நட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட அதிதி சங்கர்..!(Video)

Author: Vignesh
16 April 2024, 2:40 pm
aditi shankar -updatenews360
Quick Share

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால’ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிதி ஷங்கர் தற்போது அவ்வப்போது, ஹாட் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியும் வருகிறார்.

aditi shankar - updatenews360

மேலும் படிக்க: மகள்கள் குறித்து உருவக் கேலி கமெண்ட்ஸ் .. ஆவேசத்தில் பொங்கிய குஷ்பூ..!

இந்நிலையில், நேற்று மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்றது. ரஜினி, கமல், சூர்யா, மணிரத்தினம், சுகாஷினி, கார்த்திக், நயன், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

aditi shankar -updatenews360

மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

திருமண கொண்டாட்டத்தின் போது இயக்குனர் அட்லி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த கொண்டாட்டத்தின் போது நடிகை அதிதீ ஷங்கருடன் இணைந்து பாலிவுட் நடிகர் செம குத்தாட்டம் போட்டுள்ளார். விஜயின் அப்படி போடு பாடலுக்கு அதிதி சங்கர் அட்லீ, ரன்வீர் சிங் மற்றும் ஷங்கரின் இளைய மகன் அர்ஜித் சங்கர் அனைவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.

Views: - 96

0

0