பணம் என்னங்க பணம்.. மகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் சூப்பர் ஸ்டார்..!

Author: Vignesh
16 April 2024, 4:29 pm
shah rukh khan
Quick Share

பாலிவுட்டின் கிங் கான் என்றும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஷாருக்கான் 1965 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த ஷாருக்கானுக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. முதலில் டிவி சீரியல்களில் பணியாற்றி வந்த அவருக்கு தீவானா படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.

shahrukh khan - updatenews360

அந்த படத்துக்கு பின்னர் ஷாருக்கானின் வாழ்க்கையே மாறிவிட்டது. பாலிவுட்டில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்த ஷாருக்கானிற்கு தற்போது கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன, ஷாருக் கானின் சொகுசு வாழ்க்கை மற்றும் அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்களுடன் மற்றும் அவரது சொத்துக்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சுமார் 5593 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளொன்றுக்கு அவர் ரூ.1.40 கோடி வருமானம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். இதில் மட்டும் அவர் சுமார் 500 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

shahrukh khan - updatenews360

மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் ஆகியோர் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர்களாக உள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அசோகா, சல்தே சல்தே, ஓம் சாந்தி ஓம், மை நேம் இஸ் கான், ரா-ஒன், டான் 2, சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

shahrukh khan - updatenews360

மேலும் படிக்க: மகள்கள் குறித்து உருவக் கேலி கமெண்ட்ஸ் .. ஆவேசத்தில் பொங்கிய குஷ்பூ..!

இந்நிலையில் சுஜாய் கோஷ் இயக்கத்தில் அடுத்து கிங் என்ற படத்தில் ஷாருக் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் தனது மகள் சுஹானாவை முன்னணி கதாபாத்திரத்தில் ஷாருக் கான் நடிக்க வைக்க இருக்கிறார். முன்னதாக, இந்த படத்தை 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஷாருக் கான் தயாரிக்க இருப்பதாகவும், தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து வரும் தான் கிங் படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிகிறது.

shah rukh khan
Views: - 94

0

0