கலாநிதி மாறன் பொண்ண பாத்தா நமக்கு BP ஏறுது.. வைரலாகும் ரஜினி பேசிய Video..!

Author: Vignesh
16 April 2024, 6:09 pm
rajini - updatenews360
Quick Share

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

rajinikanth

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி பல சுவாரசியமான விஷயங்களை பேசினார். அதில் தயாரிப்பாளர் கலாநிதிமாறனின் மகள் காவியா குறித்தும் பேசினார். ஐபிஎல் போட்டியில் சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா ஆவார். சன்ரைஸ் அணி விளையாடும் போதெல்லாம் இவருடைய எக்ஸ்பிரஷன்தான் இணையதளத்தில் வைரல் ஆகும்.

Rajini

மேலும் படிக்க: மகள்கள் குறித்து உருவக் கேலி கமெண்ட்ஸ் .. ஆவேசத்தில் பொங்கிய குஷ்பூ..!

இதனை இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் நல்ல வீர்களை போடுங்க போட்டி நடக்கும்போதெல்லாம் காவியாவின் எக்ஸ்பிரஷன் பார்த்தா நமக்கே டென்ஷன் ஆகுது, பிபி ஏறுது என நகைச்சுவையாக பேசி இருந்தார். ரஜினிகாந்த் பேசியதை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒவ்வொரு போட்டியிலும் புதுப்புது சாதனைகளைப் படைத்து வெற்றியை ருசித்து வருகிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட போது அவர்களுக்கு எதிராக 277 ரன்கள் இலக்காக வைத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதுவே IPL வரலாற்றில் அதிகமான ஸ்கோர் என சாதனை படைத்தது. இதை தொடர்ந்து, நேற்று சன் ரைஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது.

இதில், முதல் இன்னிங்சில் ஆடிய ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தன. இதன் மூலம் ஏற்கனவே இருந்த தங்களுடைய டோட்டல் ஸ்கோர் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. சன்ரைஸ் ஹைதராபாத் அணி மேலும், ஐபிஎல் பாயிண்ட் டேபிள் டாப்பில் இடம் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் பேச்சை தொடர்ந்து சன்ரைஸ் ஹைதராபாத் அணி இப்படி ஆடி வருகிறது என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

Views: - 86

0

0