அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!
Author: Vignesh29 April 2024, 5:09 pm
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் சமீபத்தில், பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ரோபோ சங்கர் மகள் பிகில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பதால், மிகவும் பிரபலமான ஒருவர்தான் அவரை சொந்த தாய்மாமன் முறை கொண்ட கார்த்திக் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 15 வயது வித்தியாசம் இருந்தாலும், ஓகே என ரோபோ சங்கர் மகள் திருமணத்தை அதிக செலவு செய்து நடத்தி வைத்துள்ளார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
மேலும், ரோபோ சங்கர் மருமகனுக்கு வரதட்சணையாக பெரிய அளவில் கொடுத்துள்ளார். அதாவது, 20 லட்சம் ரூபாய்க்கு ஒரு சொகுசு கார் தங்க நகைகள் உள்ளிட்ட பல விஷயங்களை வரதட்சணையாக கொடுத்துள்ளார். இது குறித்து, ரோபோ சங்கர் கூறுகையில், அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு நடிகனாக இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் எனது மகள் திருமணத்தை ஊரே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறேன் என ரோபோ சங்கர் பெருமையாகவும் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ?.. காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரே..!
பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசியே இந்திரஜா சங்கர் தனக்கு வரும் தவறான கமெண்ட்கள் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் எப்படி இந்த மாதிரி மனசாட்சி இல்லாமல் கமெண்ட் பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பெயரை நான் மறந்துட்டேன். அவங்க இன்னும் எத்தனை நாள் இந்த ஜோடி ஆட போகுதுன்னு பார்க்கலாம்.
கொஞ்சம் மாசத்துல தனித்தனியாக பேட்டி கொடுப்பாங்க, விவாகரத்து நடக்கும் அப்படின்னு கமெண்ட் போட்டு இருந்தாங்க. எங்க மாமா மூன்று முடிச்சு ஸ்ட்ராங்கா போட்டு இருக்காரு, இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்து இருக்கு, மூணு மாசத்துக்கு அப்புறம் சொன்னா கூட பரவால்ல நான் கோபப்பட்டு இருக்க மாட்டேன். ஒரு நல்ல விஷயம் இப்பதான் நடந்து இருக்கு, இந்த மாதிரி கமெண்ட் பண்றீங்க என்று ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா வருத்தத்துடன் பேசி உள்ளார்.
0
0