விவாகரத்து ஆன பிறகும் சென்னை வராமல் ஐதராபாத்திலேயே தங்கியிருக்கும் சமந்தா.. காரணம் அவருதான்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 5:31 pm
Samantha - Updatenews360
Quick Share

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா.

இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, விவகாரத்து செய்யப் போவதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர், மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமந்தா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது அவருடைய தாய் தான் சமந்தாவை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டாராம். சென்னையில் இருந்த சமந்தாவின் தாய், உடனடியாக ஹைதராபாத் சென்று சமந்தாவை பார்த்துக்கொண்டு, தற்போது வரை சமந்தாவுடன் தான் இருக்கிறாராம்.

விவாகரத்துக்கு பின் சமந்தா சென்னைக்கு வந்துவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், ஆனால், சமந்தா ஹைதராபாத்தில் சொந்த வீடு மற்றும் சில சொத்துக்களை வாங்கி வைத்துள்ளதால், ஹைத்ராபாத்திலேயே வசிக்க முடிவெடுத்துள்ளாராம்.

Views: - 92

0

0