வெறித்தனமான ‘Fan’-ஆ இருப்பார் போல.. ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடி கொடுத்து காரியத்தை சாதித்த சம்பவம்..!

Author: Vignesh
29 March 2024, 11:38 am

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

Aishwarya Rain-updatenews360

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார்.

Aishwarya Rain-updatenews360

இந்த நிலையில், ஐஸ்வர்யாராயின் திருமணத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் தற்போது, இணையதளத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்களுக்காக பிரைவேட் பார்ட்டியில் ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டாராம். ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகராக இருந்ததால், அந்த பாட்டில் நடனமாட சுமார் 10 கோடி அளவில் காசு வாங்கி அவரை குஷ்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யாராய். இந்நிலையில், யாருக்கும் தெரியாமல் அந்த பார்ட்டி நடத்தியதால் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது, இந்த செய்தி தான் இணையதளத்தில் பேசு பொருளாக இருந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 312

    0

    0