தனுஷுடன் ஓட்டலில் இருந்தது யார்?.. பல சர்ச்சைகளுக்கு பின்பு வெளியான ரகசியம்..!

Author: Vignesh
29 March 2024, 11:22 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார்.

இந்த நிலையில், தனுஷ் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கு காரணம், தனுஷ் சில நடிகைகளுடன் தொடர்பு இருந்ததாகவும், இந்த விஷயம் ஐஸ்வர்யா காதுக்கு சென்றதால், தான் பிரிந்தார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது.

dhanush - updatenews360

இந்நிலையில், தனுஷ் கடந்த ஆண்டு ஹைதராபாத் ஹோட்டலில் பெண் ஒருவருடன் உணவு அருந்தும் படியான புகைப்படம் இணையதளத்தில் கசிந்து வைரலானது. தனுஷின் பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் காவியா ஸ்ரீராம் தானாம். அந்த சமயத்தில் இவர்களுடைய புகைப்படங்கள் ஷூட்டிங் சென்று கொண்டிருந்ததால், ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீராம் ஒன்றாக இருந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில், கூட மேடை ஒன்றில் பேசிய தனுஷ் தன்னை ஸ்டைலாக காட்டும் காவியா ஸ்ரீ ராமுக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார். இதுபோல், அவருடன் சாதாரணமாக ஷூட்டிங்கில் தனுஷ் பேசுவது நிற்பது போன்ற புகைப்படங்கள் லீக்காகி பல வதந்திகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

dhanush - updatenews360

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!