கட்டுப்பாடுகளுடன் துக்கம் விசாரிக்க அனுமதி கேட்ட அஜித்… கடுப்பாகி பிரேமலதா சொன்ன பதில்!

Author: Rajesh
10 January 2024, 11:49 am

நடிகர்வ் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத பல பிரபலங்கள் அவரது வீட்டிற்கும், நினைவிடத்திற்கும் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சூர்யா , சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அருண் விஜய் , விஷால் , ஆர்யா என பல பிரபலங்கள் அவரின் நினைவிடத்தில் வந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வராத அஜித் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம், மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எனஇத்தனை நாட்களாக வெளிநாடுகளில் இருந்துவிட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னைக்கு வந்துள்ளார். முதல் வேலையாக விஜயகாந்த் வீட்டிற்கு போன் அடித்து நேரில் சந்திக்க முடியுமா? என கேட்டு துக்கம் விசாரிக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளார்.

premalatha vijayakanth - updatenews360

அதுவும் அதிகாலை நேரத்தில் ரசிகர்கள் கூட்டம் இல்லாத சமயத்தில் வருகிறேன் என கூறியதும் பிரேமலதாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் கடும் அதிருப்தி ஆகிவிட்டாராம். இதை அறிந்த விஜயகாந்த் ரசிகர்கள் அப்படி நீங்க வந்து பார்க்கலன்னு யாரும் வருத்தப்படல…. மறைந்தவரின் குடும்பத்தினரை சந்திக்க கூட அப்பாயின்மென்ட் கேட்கும் அஜித்தை மோசமாக விமர்சித்துள்ளனர் கேப்டன் ரசிகர்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!