தொடர் கிசுகிசு.. தாலிக்கு முன் தாலாட்டு.. கமலின் முன்னாள் மனைவி சரிகாவின் கிளிக்..!

Author: Vignesh
10 January 2024, 11:33 am

1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை கமலஹாசன் திருமணம் செய்து கொண்டார். பத்தாண்டுகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், 1988 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதனை அடுத்து சரிகாவை காதலித்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில் கமலஹாசன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

sarika kamal

இவர்களுக்கு பிறந்தவர்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் 17 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தநிலையில், 2004 ஆம் ஆண்டு கமல் சரிதா ஜோடி திடீரென விவகாரத்தை பெற்றனர்.

sarika kamal

முன்னதாக, உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் இவர் நடிகை ஸ்ரீவித்யா உடன் நெருங்கி பழகி வந்தார் . தொடர்ந்து நடிகை கௌதமி, பூஜா , சிம்ரன் , ஆன்ட்ரியா , விருமாண்டி பட நடிகை அபிராமி என பல நடிகைகளுடன் நெருக்கமாக பழகி காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை சரிகா பேட்டி ஒன்றில், கமல் ஹாசன் உங்களை பிரிந்து சென்ற பிறகு அது குறித்து உங்களுக்கு வருத்தம் இருந்ததா? என கேட்டதற்கு, இல்லை…. எனக்கு அவர் மீது வருத்தமோ, கோபமோ இல்லை. அது அவரின் சுதந்திரம்? அதனால் அவர் மீது வெறுப்போ கோபமோ இல்லை.

ஆனால், அதே சமயம் அவரை போல் எனக்கு வேறொருடன் இன்னொரு வாழ்க்கை வாழ ஆசையே இல்லை. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அதனால் எனக்கு தைரியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உண்டு. எனக்கு இந்த வாழ்க்கையே போதும் என கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா மிகவும் பெருந்தன்மையோடு பேசி இருந்தார்.

sarika kamal

இந்நிலையில், சரிகா தனது மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி இருந்து சரிகா இப்போது எப்படி இருக்கிறார் எனக் கூறி வருகிறார்கள்.

sarika kamal
  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 323

    0

    0