பங்குச்சந்தை நிலவரம் : பிரபல கட்டுமான நிறுவனத்தின் பங்குகள் பன்மடங்கு உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 1:02 pm
Share market - Updatenews360
Quick Share

பங்குச்சந்தை நிலவரம் : பிரபல கட்டுமான நிறுவனத்தின் பங்குகள் பன்மடங்கு உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்திய பங்குச்சந்தை தேர்தல் வரை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் தேர்தல் முடிவுக்கு பின் அபாரமாக உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று வர்த்தகம் நிறைவடையும் முன் சென்செக்ஸ் 990.99 புள்ளிகள் அதிகரித்து 74,721 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 223 புள்ளிகள் அதிகரித்து 22,643 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. வர்த்தகம் நிறைவடையும் முன் நிஃப்டி 235.85 புள்ளிகள் உயர்ந்து 22,655.80 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 32 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின.

அதே போல கட்டுமான நிறுவனமான Constronics Infra Limited நிறுவனம் கட்டுமானத்துறைக்கு தேவையான கட்டுமான பொருளை விற்பனை செய்வதில் முனைப்புடன் செய்லபடுகிறது.

குறிப்பாக ப்ளூ மெட்டல் விநியோகம், எம்.சாண்ட், டி-சாண்ட் உள்ளிட்டவற்றை கட்டுமான நிறுவனங்களுக்கு சில்லறை விநியோகம் செய்வதில் கவனம் செலுத்தவதன் மூலம், கான்ஸ்டிரானிக்ஸ் இன்ப்ரா லிமிடேட் நிறுவனத்தின் செயல்பாடுகள் விரிவடைகிறது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள், விலாஸ் மற்றும் வீட்டுமனைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்தங்களில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 6 மாதங்களில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 150% உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 55.96 புள்ளிகளில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் -2.55 புள்ளிகள் சரிந்து 125.80 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 63.36 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 22.10 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது.

Views: - 105

0

0