நடிகர் மாதவன் வீட்டில் தீபாவளி கொண்டாடிய அஜித் – திடீரென வைரலாகும் புகைப்படம்!

Author:
4 November 2024, 7:57 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நட்சத்திர அந்தஸ்திலிருந்து வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

ajith

முன்னதாக விடாமல் சித்திரம் படம் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சமயத்தில் அஜித் குறித்த தகவல் எது வெளியானாலும் அது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி விடும். குறிப்பாக அஜித் ஸ்டார் நடிகர் என்பதால் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் என்பதால் அஜித் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அது மிகப்பெரிய அளவில் செய்தியாக பேசப்படும்.

அந்த வகையில் அவர் கார் ரேசிங் மீது ஆர்வம் காட்டி வருகிறார். உலக அளவில் கார் ரேசிங் பந்தயத்தில் அவர் பங்கேற்றும் இருக்கிறார். அந்த வீடியோ கூட இணையத்தில் வெளியாக அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் .

இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் அஜித் நடிகர் மாதவனின் வீட்டில் அவரது குடும்பத்தாரோடு தீபாவளி கொண்டாடிய பார்ட்டி புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் மாதவன் மாதவனின் மனைவி மற்றும் மாதவனின் உறவினர்கள் அனைவருக்கும் மத்தியிலும் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!