களைகட்டும் புதிய பிசினஸ்… பைக்குகள் வாங்கி குவிக்கும் அஜித் – ஒவ்வொன்னும் இத்தனை கோடியா?

Author: Shree
6 June 2023, 3:26 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சுற்றுலா செல்லுவது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவார். குறிப்பாக பைக் ரேஸில் ஆர்வமிக்கவர் அஜித்.

அவர் வழக்கமாக, ஒரு படத்தை நடித்து முடித்து விட்டால், பைக் ரைடிங் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர், கடைசியாக வெளிநாடுகளில் பைக் ரைடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியது. இந்த நிலையில், AK மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார் நடிகர் அஜித்குமார்.

எனவே இந்த நிறுவனத்துக்காக அஜித் தற்ப்போது விலையுர்ந்த 10 வெளிநாட்டு இரு சக்கர வாகனங்களை வாங்குகிறாராம். ஒரு பைக்கின் விலை 1.25 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. விரைவில் அந்த பைக்குகள் இந்தியா வந்ததும் அஜித்தின் நிறுவனம் மும்முரமாக செயல்பட தொடங்கும் என தெரிகிறது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?