இயக்குநர் மகிழ் திருமேனிக்கு கண்டிஷன் போட்ட அஜித்: AK62 தாமதமாக இது தான் காரணமாம்..!

Author: Vignesh
7 February 2023, 12:30 pm
Quick Share

நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீசாகி மெகா ஹிட் அடித்துள்ளது. அஜித் பட வரிசையில் இது நல்ல வசூலை பெற்று தந்துள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார் என்ற அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகியிருந்தது. விக்னேஷ் சிவன் தான் இயக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், அது உறுதியாகாமல் உள்ளது.

Ajith Wikki - Updatenews360

விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு எளிதாக அமைந்தாலும், கடந்த வாரம் அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனரை மாற்றிவிட்டார். இது விக்னேஷ் சிவனுக்கு கடும் மன உளைச்சல் கொடுத்தாலும், அவரின் நடத்தை தான் இதற்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.


This image has an empty alt attribute; its file name is image-235.png

பெரும்பாலும் அஜித் தன்னுடைய படத்தின் கதை உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்துவார். எதாவது குறை இருந்தால், அது எந்த பிரபலம் ஆனாலும் சரி தூக்கிவிடுவார்.

அப்படி 8 மாதம் அளவில் ak 62வது படத்தை கொடுத்ததும் விக்னேஷ் சிவன், கதை உருப்படியாக செய்யவில்லை என்று தூக்கி எறிந்து விட்டார் அஜித். இதனால் யார் அஜித்தை இயக்குவது என்ற கேள்வி எழுந்த நிலையில் தடம் உள்ளிட்ட படத்தை இயக்கிய மகிழ் திருமேனியை கமிட் செய்தார் AK.

ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகததற்கு முக்கிய காரணமே அஜித் தானாம். மகிழ் திருமேனி கூறிய கதையில் ஆக்ஷன் காட்சிகள் குறைவாக இருப்பதால் அதை சரி செய்து கொள்ளுங்கள் என்று அஜித் பல கண்டிஷனை போட்டு இருக்கிறாராம். அதெல்லாம் முடிந்து அதற்காக தயாராகி வர அஜித் சில காலம் எடுத்துப்பாரோ என்று ரசிகர்கள் புலம்பியும் வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 159

2

0