நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (கோட்) திரைப்படம் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயின்களாக ஸ்னேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளனர்.
இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
தளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்)’ திரைப்படம் கேரளா, ஆந்திரா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு முன்பே கோட் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
ஆந்திரா, கேரளா மாநிலங்களில் கோட் படத்தின் 4 மணி சிறப்பு காட்சியை பார்த்து விட்டு படத்தின் முதல் பாதி விமர்சனத்தையே சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு முதல் வாழ்த்தே தல அஜித்திடம் இருந்து தான் வந்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார் .
இது குறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கும் வெங்கட் பிரபு, கோட் படத்தின் ரிலீஸ் தினமான இன்றும் அதிகாலையிலேயே முதல் ஆளாக கோட் படத்தை வாழ்த்திய தல அஜித்துக்கு நன்றி என வெங்கட் பிரபு ட்வீட் போட்டுள்ளார். இந்த பதிவு அஜித் – விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Thank q #Thala #AK my anna for the first wish for @actorvijay na, me and team #GOAT we all love u❤️🤗😘 pic.twitter.com/81i7biJrBm
— venkat prabhu (@vp_offl) September 4, 2024
0
0