யோவ் வெங்கட் என்னய்யா பண்ணி வச்சி இருக்க…? First Half பார்த்துவிட்டு திணறும் ரசிகர்கள்!

Author:
5 September 2024, 7:31 am
GOAT MOVIE
Quick Share

தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கிறார்கள்.

goat movie

இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்தது.

Goat movie

தளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்)’ திரைப்படம் கேரளா, ஆந்திரா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு முன்பே கோட் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். ஆந்திரா, கேரளா மாநிலங்களில் கோட் படத்தின் 4 மணி சிறப்பு காட்சியை பார்த்து விட்டு படத்தின் முதல் பாதி விமர்சனத்தையே சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

Goat movie

அந்தவகையில் முதல் காட்சி படத்தை பார்த்த ரசிகர் ஒருவர்…. யோவ் VB என்னையா பண்ணி வச்சிருக்க…? ஃபர்ஸ்ட் ஹாஃப் போனதே தெரியலயேயா! என பாசிட்டிவ் விமர்சனத்தை கூறியுள்ளார். முதல் பாதியில் தளபதியின் வெறித்தனமான இன்ட்ரோ காட்சிக்கு தியேட்டரே அதிருதாம். அத்துடன் தளபதி விஜய்யின் ஸ்குவாட் கெமிஸ்ட்ரி மேலும் அவரின் ஃபன் சைடு உள்ளிட்டவற்றை முதல் பாதியில் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் பாசிட்டிவ் விமர்சனத்தை குவித்து வருகிறார்கள்.

  • Instagram ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 142

    0

    0

    Leave a Reply