நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்தது.
தளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்)’ திரைப்படம் கேரளா, ஆந்திரா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு முன்பே கோட் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். ஆந்திரா, கேரளா மாநிலங்களில் கோட் படத்தின் 4 மணி சிறப்பு காட்சியை பார்த்து விட்டு படத்தின் முதல் பாதி விமர்சனத்தையே சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தை காண காத்திருக்கின்றனர். இப்படியான நேரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தனது சமூகவலைத்தள பக்கத்தில்…. GOAT படத்திற்கு டிக்கெட் கிடைவில்லை என கூறி புலம்பியுள்ளார். இருந்தாலும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
0
0