அஜித் மகள் பகிர்ந்த புகைப்படத்தால் ஸ்தம்பித்துப்போன ரஜினி ரசிகர்கள்? இதை எதிர்பாக்கவே இல்லையே!

Author: Prasad
16 August 2025, 11:10 am

அமோக வரவேற்பை பெற்ற கூலி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கதை மற்றும் திரைக்கதை ரீதியாக மிகவும் திடமாக எழுதப்படவில்லை என பலரும் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். 

Ajith kumar daughter anoushka shared super star title card in insta story

எனினும் ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பு பார்வையாளர்களை அசரவைத்தது.  மேலும் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலரும் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

படத்தில் இடம்பெற்ற சில மாஸ் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன. எனினும் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் இத்திரைப்படத்தை பார்த்து வருவதால் “கூலி” திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய வசூலை கண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இத்திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ.50 கோடிகள் வசூலை பெற்றுள்ளது. 

அஜித் மகள் பகிர்ந்த புகைப்படம்

இந்த நிலையில் அஜித்தின் மகளான அனோஷ்கா “கூலி” திரைப்படத்தை பார்த்துள்ளார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டை பகிர்ந்துள்ளார். இதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது ரஜினிகாந்த் ரசிகர்கஐ உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அஜித்தின் மகளே சூப்பர் ஸ்டாரின் ரசிகைதான் என சமூக வலைத்தளங்களில் பெருமையாக பேசி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!