தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்றது. அதை அடுத்து தற்போது குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார் .
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் அஜித்தை விமான நிலையம் ஒன்றில் பிரபல இசை அமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் சந்தித்த அனுபவத்தை குறித்த பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் .
அதாவது நான் ஒருமுறை அஜித் சாரை விமான நிலையத்தில் சந்தித்தேன். நான் யார் என்றே தெரியாமல் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு என் மனைவி அங்கு வந்து நான் யார் என்பதையும் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதையும் அவருக்கு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: வெளிநாட்டில் கணவரின் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா… ரொமான்டிக் COUPLE’க்கு குவியும் வாழ்த்து!
அதனை கேட்டுவிட்டு மிகவும் அப்செட் ஆன அஜித் என்னை தனியாக அழைத்துச் சென்று மன்னிப்பு கேட்டார் ஒரு பெரிய ஸ்டார் ஹீரோவாக இருக்கும் அவன் நான் பேசிய ஒரே ஒரு காரணத்திற்காக என்னை மதித்து பேசியதோடு என்னிடம் மன்னிப்பு கேட்ட அந்த விஷயம் என்னால் மறக்கவே முடியாது. அது மிகச் சிறந்த தருணம் எனக் கூறியிருந்தார் சந்தோஷ் நாராயணன்.
0
0