அரசியல் சர்ச்சைக்கு அன்றே முற்றுப்புள்ளி வைத்த அஜித்..! எழுந்து நின்று கைதட்டிய சூப்பர் ஸ்டார்..! (வீடியோ)

Author: Vignesh
3 January 2023, 12:15 pm

கடந்த 2010ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் மேடையில் பேசிய அஜித், ‘ கலைஞர் அய்யாவிற்கு ஒரு வேண்டுகோள், எனவும், இனிமேல் சென்சிட்டிவான விஷயங்களுக்கும், சமூக விஷயங்களுக்கும் இண்டஸ்ட்ரி தலையிட வேண்டாம் என்று நினைக்கிறன் என கூறினார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், ஒவ்வொரு முறையும் இப்படியொரு விஷயம் நடக்கும் பொழுது இண்டஸ்ட்ரியில் பொறுப்பில் இருக்கும் சிலர் எங்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு வரவழைக்கிறார்கள் எனவும், அதனால் தான் நாங்கள் வருகிறோம் என்றும், எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள்’ என்று மிகவும் தைரியமாக நடிகர் அஜித் பேசியிருந்தார்.

நடிகர் அஜித்தின் இந்த பேச்சை கேட்டவுடன் கலைஞர் அருகில் அமர்ந்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக எழுந்து நின்று கைதட்டினார் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அஜித்தின் இந்த தைரியமான பேச்சு இன்று வரை திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.

ajith -updatenews360

ஏனென்றால், இந்த அளவிற்கு அன்றைய முதல்வர் முன் தைரியமான பேச்சை வேறு எந்த நடிகரும் வெளிப்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக உண்மை. 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவை, திடீரென ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…