வெறித்தனமா தயாராகும் தல ” விடாமுயற்சி ” வித்யாசமா இருக்கனும் இயக்குனருக்கு கண்டீஷன்!

Author: Shree
12 May 2023, 9:52 pm

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு எந்த வித பந்தாவும் இல்லாமல் மார்க்கெட் உசத்தில் இருக்கும் டாப் நடிகரான அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் AK 62 டைட்டில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தின் ராசியான முதல் எழுத்தான “v”ல் தான் இந்த முறையும் “விடாமுயற்சி” என டைட்டில் உள்ளது. இதனால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறலாம். மேலும் இதன் டைட்டிலில் சில சீக்ரெட்ஸ் ஒளிந்திருக்கிறதை பார்க்க முடிகிறது.

அதாவது, விடாமுயற்சி என்ற டைட்டிலில் “ற்” என்ற வார்த்தையில் வைக்கப்பட்ட புள்ளி தேடல் பொருளை உணர்த்துவதாக இருக்கின்றது. எனவே இப்படத்தில் அஜித்தின் வேர்ல்ட் டூர் பயணத்தின் ஸ்வாரஸ்யங்களையும், சாகசங்களையும் டாகுமெண்ட்ரியாக எடுக்கலாம் என எதிர்பார்க்க முடிகிறது. அது மட்டும் இல்லாமல் போஸ்டரில் சுழல் இடம் பெற்று இருப்பதால் ஒரு கப்பல் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள அஜித்திற்காக இரு நடிகைகளை தேர்வு செய்யும் வேலையில் மகிழ்திருமேனி இருந்து வருகிறார். அந்தவகையில், அந்த லிஸ்ட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா, கேத்ரினா கைஃப், கங்கனா ரணாவத், கரீனா கபூர் போன்ற 5 பேரிடம் விடாமுயற்சி படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் மகிழ்திருமேனி என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் அஜித் தனது கெட்டப் துணிவு படத்தில் பெரிதும் பேசப்பட்டது என்றும் அதே போல் ஏதேனும் மாஸான வித்யமான லுக் கொடுக்குங்கள் என மகிழ் திருமேனியிடம் கூறினாராம். இதற்கு அவரும் ஓகே சொல்ல அதற்கான வேலைகள் வெறித்தனமாக நடந்து வருகிறது. பல வருடங்கள் கழித்து இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!