முக்கோண காதலுடன் அரசியல் பேசும் ‘இராவண கோட்டம்’ – திரைவிமர்சனம்!

Author: Shree
12 May 2023, 9:10 pm
ravana kottam
Quick Share

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிகை ஆனந்தி நடித்துள்ள ராவணக் கோட்டம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் 1957-ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கீழத்தூவல் கலவரம் பற்றியும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக படத்தை வெளியிடக்கூடாது என பல எதிர்ப்புகள் எழுந்தது. சர்ச்சைகளை மீறி வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் மைய கரு:

முக்கோண காதல் பின்னணியில் கருவேலம் காட்டு அரசியலை குறித்து பேசும் விதமாக ‘இராவண கோட்டம்’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

படத்தின் கதை:

1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சீமை கருவேல மரங்களின் விதைகள் விமானம் மூலமாக தூவப்பட்டதாகவும், அதனால் தான் இந்தியா முழுவதும் இது போன்ற சீமை கருவேல மரங்கள் இருப்பதாகவும் இது மண் வளத்தையும், விவசாய நிலத்தையும் வறண்ட நிலமாக சிதைத்துவிடுகிறது. இதை எதிர்த்து போராடிய மக்கள் குறித்து இப்படம் பேசுகிறது.

1957 ஆம் ஆண்டு ராமநாதபுரம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு என இரு சமூக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் மேலத்தெரு மக்களுக்காக பிரபுவும், கீழ்த்தெரு மக்களுக்காக இளவரசும் முன் நின்று வழி நடத்துகின்றனர். சாதியை கடந்து ஒற்றுமையாய் வாழும் இவர்கள் அரசியல் கட்சிகளை உள்ளே அனுமதிப்பதில்லை. ஆனால் அரசியல் சுயலாபத்திற்காக இருதரப்பு மக்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். இப்படம் கருவேல மர பிரச்சனை, கார்ப்ரேட் மாஃபியா உள்ளிட்ட பல விஷயங்களை பேசுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘இராவண கோட்டம்’ படத்தின் கதை.

படத்தின் ப்ளஸ்:

துடிப்பான இளைஞராக ஆக்ரோஷம் கலந்த யதார்த்தமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் சாந்தனு.

ஹீரோயின் கயல் ஆனந்தி வழக்கம் போலவே வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர்கள் பிரபு, இளவரசு தங்களது அனுபவப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

படத்தின் மைனஸ்:

படம் முழுக்க பல்வேறு விஷயங்களை பேச நினைத்து அதை அழுத்தமில்லாமல் பதிவு செய்து மக்கள் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது இராவண கோட்டம்.

படத்தின் மதிப்பெண் 3/5

Views: - 569

0

0