ஜூன் 4 முதல் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 12:58 pm
Kej
Quick Share

ஜூன் 4 முதல் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேச்சு!

மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு அண்மையில் ஜாமீன் கிடைத்தது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் தாக்கல் செய்தது.

அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தது.
அப்போது, ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

மேலும் படிக்க: கண்ணை மறைத்த கள்ளக்காதல்… பறிபோன பிஞ்சு உயிர்கள்.. கணவன் எடுத்த விபரீதம் : கதிலகலங்கிய சென்னை!

மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள மெஹராஜ் சந்தையில் வாகன பேரணியில் ஈடுபட்டார்.

அப்போது பொது மக்கள் மத்தியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். இந்த வாகன பேரணியில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கலந்து கொண்டார்.

வாகனப் பேரணியில் பேசிய கெஜ்ரிவால், ஜூன் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி ஆட்சியை அமைக்கும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம். கடவுள் எனக்கு 21 நாட்களை வழங்கியுள்ளார். நான் சர்வாதிகாரத்தை ஒழிக்க நாடு முழுக்க சுற்றி 24 மணி நேரமும் பணியாற்றுவேன்.

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதே பிரதமர் மோடியின் ஒரே லட்சியம். எதிர்க்கும் அனைத்து தலைவர்களையும் முடித்து கட்ட பிரதமர் மோடி நினைக்கிறார் என கூறினார்.

Views: - 135

0

0