அம்மா, அப்பா பிரிஞ்சது இதனால் தான்… அக்ஷரா ஹாசன் எமோஷ்னல்..!(Video)

Author: Vignesh
18 July 2024, 5:54 pm

கமலஹாசன் மகளாக வாரிசு நடிகை என்ற கெத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். இவர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடாஷா என்ற கதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் அமிதாபச்சன் தனுஷ் நடிப்பில் வெளியான சமிதாப் படத்திலும் நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற படங்களில் சைட் ரோல் நடிகையாக நடித்திருப்பார்.

akshara haasan

தற்போது, அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன் மும்பையில் அவருடைய தாயாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசன் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

akshara haasan

அதில், என்னுடைய அப்பா, அம்மா பிரிந்த சமயத்தில் அதை எப்படி ஹாண்டில் பண்ணுவது என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை எல்லா பசங்களும் பீல் பண்ற மாதிரி தான் நாங்களும் பீல் பண்னோம். ஆனால், இதையெல்லாம் சரியாகிவிடும் என்று எங்களுக்குள்ளே நானும் என் அக்காவும் மனதை தேற்றிக்கொண்டோம். என்னுடைய அப்பா, அம்மா இல்லாத ஒரு கவலையை போக்கியவர். என்னுடைய அக்காதான் என் பெற்றோர் நிலையிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டார். என்னுடைய அம்மா அப்பா இருவரும் சிறந்த காதல் ஜோடிகளாக தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், ஏதோ சில காரணங்களால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் புரிந்து விட்டார்கள் என அக்ஷராஹாசன் அந்த பேட்டியில் எமோஷனலாக பேசியிருந்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!