புடவையில் கசிந்த புஷ்பா 2 புகைப்படம்… அல்லு அர்ஜுனின் மிரட்டலான லுக் வைரல்!

Author: Rajesh
30 January 2024, 5:36 pm

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடிக்க வெளியான இப்படம் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வசூலில் பெரிய அளவில் சாதனை படைத்தது.

குறிப்பாக இப்படத்தில் நடிகை சமந்தா ஆடிய ஸ்பெஷல் ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அந்த பாடல் இப்போதும் ஹிட் லிஸ்டில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்ப்போது மும்முரமாக தயாராகி வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த அவளோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமந்தாவின் நடனம் புஷ்பா 2 படத்தில் இல்லை என செய்தி வெளியானது. ஆம், இந்த முறை சமந்தாவிற்கு பதில் “குண்டூர் காரம்” படத்தில் நடித்த ஸ்ரீலீலா தான் புஷ்பா 2 ஐட்டம் டான்ஸ் ஆடுகிறாராம். அதற்காக அவருக்கு ரூ. 2 கோடி ருபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அல்லு அர்ஜுன் புடவையில் மேக்கப் போட்டு தயாராகிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று கசிந்து சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. Gangamma Thalli லுக்கில் இருக்கும் அல்லு அர்ஜுனின் இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!