சம்திங் சம்திங்கா?.. பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி.. வைரலாகும் போட்டோ..!
Author: Vignesh11 June 2024, 11:09 am
இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிறகு, அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.
குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், தற்போது கவர்ச்சியை அள்ளி வீசியதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் மக்களின் கணிப்பு. மேலும், அவ்வப்போது Photoshoot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
மேலும் படிக்க: இந்த போட்டோவில் இருக்கும் CWC பிரபலம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!
தற்போது, கண்ணகி என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஹாட்ஸ்பாட். இந்தப் படம் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகியிருந்தது.
மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!
இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்து தற்போது வெளியேறி சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு இயக்குனராக இருந்து வரும் இயக்குனர் பார்திவ் மணியுடன் எடுத்த புகைப்படத்தை அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அம்மு அபிராமி பகிர்ந்துள்ளார். ஏற்கனவே, இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பிறந்ததற்கு நன்றி வாழ்வில் வந்ததற்கு நன்றி என வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இதனை பார்த்த ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் காதலில் இருக்கிறார்களா என்றும் ஒருவேளை அப்படி இருக்குமோ என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்.
0
0