நான் அதுக்காக ரொம்ப ஏங்கி இருக்கேன்.. அம்மு அபிராமி Open Talk..!

Author: Rajesh
24 April 2022, 12:04 pm
Quick Share

தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் சின்னத்திரை நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி ஷோவை தான் சொல்லவேண்டும். அதில் போட்டியாளராக மற்றும் கோமாளிகளாக பங்கேற்கும் பிரபலங்கள் தற்போது அதிகம் பாப்புலர் ஆகி சினிமாவிற்கு செல்கின்றனர்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் அசுரன் பட புகழ் நடிகை அம்மு அபிராமி. அவர் இன்றைய எபிசோடில் மிகவும் உருக்கமாக ஒரு விஷயத்தை பற்றி பேசி இருக்கிறார்.

’11ம் வகுப்பிலேயே டிஸ்கன்டினியு செய்துவிட்டு அதன் பிறகு கரஸ்ல தான் படிச்சேன். அதனால் எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. ஒரு சின்ன சர்க்கிள் தான்.

‘பழக நிறைய பேர் வேண்டும் என நான் அதிகம் ஏங்கி இருக்கிறேன். அந்த குறையை போக்கியது குக் வித் கோமாளி தான்’ என அம்மு அபிராமி கூறி இருக்கிறார்.

Views: - 985

3

0