கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?
Author: Prasad6 May 2025, 7:26 pm
மாஸ் காம்போ
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் LCUவுக்குள் வருமா? என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இத்திரைப்படம் LCU இல்லை என லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அறிவித்துவிட்டார். எனினும் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வெளியானது Glimpse வீடியோ
இந்த நிலையில் “கூலி” திரைப்படத்தின் Glimpse வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதில் சௌபின், உபேந்திரா, சத்யராஜ், நாகர்ஜுனா ஆகியோரின் பின்னந்தலை காட்டப்படுகிறது. அதன் பின் ரஜினிகாந்த் துறைமுகப்பகுதியில் மாஸ் ஆக நிற்பதை காட்டுகிறார்கள். இதன் மூலம் இது துறைமுகத்தை மையப்படுத்திய கதையம்சம் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் என தெரிய வருகிறது.
இந்த அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் ஒரு நடிகரை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட தகவல் என்றே கூறுகின்றனர்.
அந்த வகையில் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ஆமீர்கான் எங்கே என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்திரைப்படத்தில் ஆமீர்கானின் கதாபாத்திரம் ஒரு சர்ப்ரைஸ் எலெமண்ட்டாக நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.