கச்சேரிக்கு வரியா வரியா…? வடநாட்டு பாடகியை அழைத்துச்சென்று தனி அறையில் கச்சேரி நடத்தும் அனிருத்!

Author: Shree
24 August 2023, 1:30 pm

ஒல்லி இசையமைப்பாளரான அனிருத் தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து டாப் லிஸ்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 , ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளாள் ஜவான் என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார்.

அனிருத் டீனேஜ் வயதிலே இசைமைப்பளராக புகழ் பெற்றுவிட்டார். தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அடிக்கல் நாட்டி வருகிறார்.

மிகச்சிறந்த இளம் இசையமைப்பாளராக புகழ் பெற்றுள்ள அனிருத் ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பிரபல வடநாட்டு பாடகி ஜொனிதா காந்தியை ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு கச்சேரிக்கு செல்லும் அனிருத் செல்லும் இடமெல்லாம் ஜொனிதா காந்தியை கூடவே அழைத்து செல்கிறாராம்.

அதுமட்டும் அல்லாமல் அங்கு அவருடன் தனி அறையில் நேரத்தை செலவிட்டு வருவதாக செய்தி ஒன்று கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அது உண்மையாக இருக்கலாம் என மக்கள் நம்பிவிட்டார்கள். அனிருத் அப்படிப்பட்டவராம் அப்படித்தான் ஊருக்குள்ள எல்லோரும் பேசிக்கிறாங்க.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!