நீங்க ரெடியா?.. சமந்தா கூட Time Spend பண்ணலாம்.. ஆனால், டிக்கெட் மட்டும் இத்தனை லட்சமாம்..!
Author: Vignesh24 ஆகஸ்ட் 2023, 1:00 மணி
மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
தொடர்ந்து அவர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திக்கொண்டே குஷி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடித்த போது விஜய் தேவர்கொண்டாவுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு காதலாக மாறி யுள்ளதாக கிசு கிசு செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட விஜய் தேவரகொண்டா உடன் நெருக்கமாக நடனமாடிய வீடியோ படு வைரல் ஆனது. குஷி படத்தின் வெளிநாட்டு பிரமோஷனுக்காக சமந்தா சென்றுள்ளார். அங்கு குஷி திரைப்படத்தை நாளை திரையிடுகின்றனர்.
இதில், கலந்து கொள்ள நடிகை சமந்தாவிற்கு 30 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான டிக்கெட் விலை மட்டுமே ரூ. 12 ஆயிரமாம். மேலும், குஷி படத்தை சமந்தாவுடன் பக்கத்தில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்றால், ஒரு டிக்கெட்டின் விலை இரண்டு லட்ச ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த காட்சிக்கான டிக்கெட் ஓபன் செய்தவுடன் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
0
0