எனக்கு குழந்தை இல்லை.. அதனால் பட்ட அவமானம்.. உருக்கமாக பேசிய பிக்பாஸ் அனிதா சம்பத்..!

Author: Vignesh
16 March 2024, 3:23 pm

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

மேலும், இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சில நாட்களிலேயே அனிதா ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.

அதோடு இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். அதன் பின் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். தொடர்ந்து சொந்தமாக பிசினஸ் கூட நடந்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது மோசமான நாட்கள் குறித்து வேதனையை பகிர்ந்துள்ளார்.

அதாவது, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை என்பது குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். அதில், எப்போ குழந்தை அப்படின்னு யாருமே எங்களை கேட்பதில்லை. நீங்கள் சீக்கிரம் காட்டுங்க அப்படி என்று எங்கள் குடும்ப வட்டாரத்தில் கேட்பார்கள். அப்படி கேட்கும் போது ஒரு மாதிரி சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கும்.

எல்லாமே பக்குவப்பட்ட மனிதர்களாக இருக்கிறார்கள். ஒரு முறை வேலூர் சென்றபோது, அங்கே ஒரு குட்டிப் பாப்பா இருந்தது. அவளை பார்த்ததும் ஒரு மாதிரியாக இருந்தது. கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு இப்படி பாப்பா ஒன்று இருந்தால், அது மூணு வயசு இருக்குமே. அப்படின்னு தோணும், இந்த பாப்பாவுக்கு ஒரு வயசு தான் ஆச்சு ஆனா ஆசையா இருந்துச்சு. இந்த மாதிரி, நமக்கு இருந்திருக்கும் என்று ஃபீல் பண்ணினேன் என்று அனிதா சம்பத் எமோஷனலாக பேசியுள்ளார்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?