கூலி 1000 கோடி வசூல் அடிக்க வாய்ப்பு இல்லை? ஏ ஆர் முருகதாஸின் பேட்டியால் அதிர்ச்சி!
Author: Prasad18 August 2025, 12:05 pm
கூலி 1000 கோடி வசூல்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான “கூலி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்புகள் உடைய திரைப்படமாக அமைந்தது. ஆனால் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா 2” திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. தமிழில் இது வரை எந்த பெரிய ஹீரோ திரைப்படமும் ஆயிரம் கோடி வசூல் செய்ததில்லை. அந்த வகையில் “கூலி” திரைப்படம் நிச்சயம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் திரைப்படங்கள் ரூ.1000 கோடி வசூல் செய்யாததற்கான காரணத்தை குறித்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

இதுதான் காரணம்?
“மற்ற மொழி திரைப்படங்கள் ரூ.1000 கோடி வசூல் செய்கின்றன. அவர்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். ஆனால் தமிழ் இயக்குனர்களோ படத்தின் மூலம் கல்வி கற்பிக்கிறார்கள். இதனால்தான் மற்ற திரைப்படத்துறைக்கும் தமிழ் திரைப்படத்துறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது” என ஏ ஆர் முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இவரின் பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் “கூலி படம் 1000 கோடி அடிக்க வாய்ப்பில்லையா?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
