தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

Author: Vignesh
3 April 2024, 11:40 am

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.

ar rahman

சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால், அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

ar rahman - updatenews360

மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார். திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் இசை கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலும் படிக்க: Parking பஞ்சாயத்து.. சவுண்ட் சரோஜா ரேஞ்சுக்கு சண்டை போட்ட சரண்யா..! CCTV காட்சிகள் வெளியீடு..!

ar rahman

இந்நிலையில், கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள ஏ ஆர் ரகுமானின் முழு சொத்து மதிப்பு 1700 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு படத்திற்காக எட்டு முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?