“தெறிக்க விடுமா அரபிக் குத்து”? – இப்போதே டிரெண்டிங்கில் கலக்கும் விஜய் ரசிகர்கள்.!!

Author: Rajesh
13 February 2022, 7:25 pm

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

Beast Fest - Updatenews360

கடந்த 7ம் தேதி ‘அரபிக் குத்து’ என்ற பாடல் வெளியீடு குறித்து வித்தியாசமான முறையில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரும் இணைந்து பாடல் வெளியீட்டின் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 2 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து வரவேற்பை பெற்றது.

தற்போது, பாடல் வெளியீடு நாளை வெளியிடப்படும் என்று ‘பீஸ்ட்’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுளள்து. ‘நாளை முதல் உங்கள் பிளேலிஸ்ட்டில் அரபிக் குத்து’ என்று வரிகளுடன் பகிரப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஸ்டைலிஷான காஸ்டியூம் உடன் உள்ளனர். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?