என்ன சொல்றீங்க பிகினியா?.. சூப்பர் ஹிட் படத்திலிருந்து தெறித்து ஓடிய விஜய் பட நடிகை..!

Author: Vignesh
4 April 2024, 5:08 pm

கேரளத்து பைங்கிளியான நடிகை அசின் நல்ல உயரம், அழகான தோற்றம் , ஸ்லிம் பிட் லுக் என அறிமுகம் ஆனதில் இருந்தே இருந்தே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் அழகால் வசீயம் செய்தவர். ஆரம்பத்தில் பரதநாட்டியக் கலைஞராக இருந்த அசின் 2001 ஆம் ஆண்டில் வெளியான ” நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

அறிமுகமான முதல் படமே மாபெரும் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்ததால் அசின் புகழ் பாராட்டப்பட்டு தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வந்தார். பின்னர் தெலுங்கில் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ” அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி” என்று படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அசின் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார்.

அது தான் தமிழில் வெளிவந்த எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படம். தமிழிலும் சூப்பர் ஹிட் அடிக்க கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர் பாலிவுட்டிற்கு சென்று இந்த பக்கமே திரும்பி பார்க்கவில்லை. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் அசின் தொடர் ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து பட வாய்ப்பே கிடைக்காமல் சினிமாவை விட்டே ஓடிவிட்டாராம். அதற்கெல்லாம் காரணம் அஜித் தான் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: உடம்புல அவ்வளவு பிரச்சினை.. லாஸ்லியா இதனால் தான் இப்படி ஆனாராம்..!

asin - updatenews360

ஆம், அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் முதலில் நடிக்க இருந்தது அசின் தானாம். அதற்காக கிளாமராக அசினை வளைத்து வளைத்து படம் படித்துவிட்டு ஒரு நீச்சல் உடையை கொடுத்து அணிந்திருக்கும் ஆடையை கழட்டிவிட்டு இதை மாற்றிக்கொள்ளுங்கள் என கொடுத்தார்களாம். அதை பார்த்ததும் அதிர்ந்துபோன அசின்… ஐயோ என்ன இது? இதெல்லாம் என்னை ஒப்பந்தம் செய்யும்போது சொல்லவில்லை. திடீரென இப்படியெல்லாம் நடிக்க சொல்றீங்க? என்னால் முடியாது தயவுசெய்து ஆள விடுங்க என பாதியிலே ஓடிவிட்டாராம்.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

இதனை அன்றைய பத்திரிகைகள். அஜித்திற்கே நோ சொன்ன அசின்… திமிர் பிடித்தவர், தலைக்கனம் ஏறிடிச்சி என்றெல்லாம் கன்னாபின்னானு எழுதி அவரது கெரியரே காலி பண்ணிட்டாங்க. அதன் பிறகு யாரும் அசினுக்கு படவாய்ப்புகள் தரவில்லை. இதனால் இந்திக்கு சென்ற அவர் அங்கு தொழில் அதிபர் ராகுல் சர்மாவுடன் ஏற்பட்ட நட்பால் திருமணம் செய்துகொண்டு ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறினார்.

asin - updatenews360
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!