GoodNews சொன்ன நிக்கி கல்ராணி… வைரலாகும் PHOTOS குவியும் வாழ்த்துகள்..!

Author: Vignesh
4 April 2024, 5:17 pm
nikki galrani
Quick Share

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் டார்லிங் என்னும் படம் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து யாவராயினும் நா காக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவி, தேவ், ராஜ வம்சம், இடியட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வருகிற இவர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ஆதி பிணிசெட்டியை திருமணம் செய்து கொண்டார். ஆதி தமிழில் மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், கோச்சடையான், யாவராயினும் நா காக்க, மரகத நாணயம், போர் வீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்து பிரபலமானவர்.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

இதில் யாவராயினும் நா காக்க படத்தில் ஒன்றாக நடித்த நிக்கி கல்ராணிக்கும்- ஆதிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜோடிக்கு இணையதளத்தில் பலரும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். ஆனால், இது குறித்து ஆதி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Views: - 74

0

0