பாகுபலிக்கே இப்படி ஒரு நிலைமையா? வாடகை வீட்டில் வசிக்கும் பிரபாஸ் – மாசம் எவ்வளவு தெரியுமா?

Author: Rajesh
27 February 2024, 7:57 pm

தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். அதன் பின்னர் சாஹோ, போன்ற படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் தோல்வியடைந்தது. அதையடுத்து ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த அந்த திரைப்படமும் அட்டர் பிளாப் ஆனது.

அடுத்ததாக சலார் படத்தில் நடித்து வெற்றியை ருசித்த பிரபாஸ் தற்போது லண்டனில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்களுடன் தங்கி வருகிறாராம். அங்கு ஹோட்டல்களில் ரூம் எடுத்து தாங்கினால் ப்ரைவசியாக இருக்காது என நினைத்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறாராம். அந்த அப்பார்மென்டின் ,மாச வாடகை மட்டும் ரூ. 60 லட்சமாம். இம்புட்டு செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறாரா பிரபாஸ்? என ரசிகர்கள் வாயடைத்து போய்விட்டார்கள்.

  • retro movie first day collection report ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!