நண்பர்கள் வட்டாரத்தால் நாறிப்போன இளம் இயக்குனர்… தேடி போய் மறுவாழ்வு கொடுத்த அருண் விஜய்!

Author: Rajesh
27 February 2024, 7:36 pm
arun vijay
Quick Share

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் நடிக்க ஆரம்பித்து தனது கெரியரை துவங்கினார். அவர் தொடர்ந்து காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி போன்று சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவர் முன்னணி நடிகராக வரமுடியவில்லை.

தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்ததால் அவர் மார்க்கெட் இழந்து ராசியில்லாத நடிகராக சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். வாரிசு குடும்பத்தில் பிறந்தும், நல்ல நடிப்பு திறமை இருந்தும் கதை தேர்வு சரியாக செய்ததால் அருண் விஜய் கெரியரையே இழந்துவிட்டார்.

அதன் பின்னர் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து மிரட்டினார். இப்படத்தில் அஜித்தை காட்டிலும் அருண் விஜய் கேரக்டர் தான் பெரிதாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தது. அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் வாய்ப்புகள் மளமளவென குவிந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளார். அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் மற்றும் அக்னி சிறகுகள் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அறிமுகமான புதிதில் இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். அப்படத்தின் சிறப்பான திரை கதையினாலும் நேர்த்தியான இயக்கத்தினாலும் முன்னணி இயக்குனர்களையே வாயடைக்க செய்தார் கார்த்திக் நரேன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து நரகாசுரன் படத்தை இயக்க தொடங்கினார்.

அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்த நரகாசுரன் படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்கினார்கள். ஆனால், கௌதம் வாசுதேவ் மேனன் கடன் பிரச்சனையில் கோர்த்துவிட்டு படத்தை கிடப்பிலே போட்டுவிட்டார்கள். இதனால் ஹிட் இயக்குனராக பெயர் எடுத்த கார்த்திக் நரேன் அட்ரசே இல்லாமல் போய்விட்டார்.ஒரு கட்டத்தில் அவரே வெறுப்பாகி அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு யோசிக்க ஆரம்பித்த நிலையில் அருண் விஜய் வாண்டடா வந்து கார்த்திக் நரேனுக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பை அளித்தார். அப்படி உருவாகி வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் தான் மாஃபியா சாப்டர்.

Views: - 86

0

0