கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்… 4 கண்டெய்னர் லாரிகளில் ரூ.2,000 கோடி… அதிர்ந்து போன அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 5:14 pm

ஆந்திராவில் ரூ.2000 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் வரும் 31ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதோடு, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லும் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: CSK-வுக்கு தொங்கலில் பிளே ஆஃப் வாய்ப்பு… ரிவேஞ்சுக்கு தயாரான கோலி ; பரபரப்பில் ஐபிஎல் தொடர்..!!!!!

இந்த நிலையில், அனந்தபுரம் மாவட்டத்தில் பாமிடி அருகே உள்ள கஜ்ராம்பள்ளி எனும் இடத்தில் வாகன சோதனை நடத்தப்பட்டு வந்தது. அப்போது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனை செய்ததில், அதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைக் கண்டு பதறிப் போன அதிகாரிகள், ஓட்டுநரிடம் விசாரணை செய்ததில், அந்தப் பணம் கேரளாவில் உள்ள 3 வங்கிகளுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. ரிசர்வ் வங்கி அனுமதியுடன் ஐதராபாத்தில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை அதிகாரிகள் விடுவித்தனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!