CSK-வுக்கு தொங்கலில் பிளே ஆஃப் வாய்ப்பு… ரிவேஞ்சுக்கு தயாரான கோலி ; பரபரப்பில் ஐபிஎல் தொடர்..!!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 4:35 pm
Quick Share

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை, பெங்களூரூ அணிகள் ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டது என்றே சொல்லலாம். அதேபோல, இதுவரை 10 ஆட்டங்கிளல் விளையாடியுள்ள பஞ்சாப், குஜராத் அணிகளும் தலா 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. எனவே, எஞ்சிய போட்டிகளில் ஏதேனும் மிராக்கல் நடந்தால் மட்டுமே இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றை பற்றி யோசிக்க முடியும்.

மீதமுள்ள 6 அணிகளில் 9 போட்டிகளில் விளையாடி, 8ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ராஜஸ்தான். ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்றே சொல்லலாம். இருப்பினும், இன்னும் இருக்கும் 5 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தையோ அல்லது 2வது இடத்தையோ தக்க வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: அண்ணாமலை ஏன் வாய் திறக்கல…. 5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் எங்கே..? பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!!!

எஞ்சிய 3 இடங்களுக்கு கொல்கத்தா, லக்னோ, சென்னை, ஐதராபாத், டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சென்னை அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி, 5ல் வெற்றியும், 5ல் தோல்வியையும் பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப்பிற்கு முன்னேற முடியும். மாறாக, ஏதேனும் ஒரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தாலும் கூட, பிற அணிகளின் முடிவை பொறுத்தே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த போட்டியில் பஞ்சாப்புடன் தோல்வியை சந்தித்த சென்னை அணி, மீண்டும் அடுத்த போட்டியில் பஞ்சாபை எதிர்கொள்ள இருக்கிறது. ஸ்பின் அணிக்கு எதிராக சென்னை அணி திணறுவதை அறிந்து, அந்த அணியின் கேப்டன் ஸ்பின்னர்களை வைத்து காய் நகர்த்தியே கடந்த போட்டியில் வெற்றி பெற்றார். எனவே, அடுத்த போட்டியிலும் அவர் இதே ஃபார்முலாவை கையில் எடுத்தால், சென்னையின் நிலை அதோ கதிதான்.

இதற்கு அடுத்ததாக, குஜராத், ராஜஸ்தான், பெங்களூரூ அணிகளுடன் சென்னை அணி விளையாட இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்தை பிடித்துள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டமும் சென்னைக்கு சவால் மிகுந்ததாகவே இருக்கும். அதேவேளையில், தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பி அதிரடி காட்டி வரும் ஆர்சிபியும் சென்னைக்கு கடைசி நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

வழக்கமாக, ஐபிஎல் தொடர்களில் புள்ளிப்பட்டியலிலில் முதல் இரண்டுகளை பிடித்து, பிளே ஆஃப்பிற்கு தகுதி பெறும் சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 251

0

0