இதுக்கு தான் விஜய் சேதுபதி கூட நடிக்கிறார்களா?.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை..!
Author: Vignesh2 மே 2024, 4:08 மணி
“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.
அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். குறிப்பாக கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்ட காயத்ரி ஷங்கர், ” நான் படவாய்ப்புகள் இல்லாதிருந்த சமயம் அது…. அப்போது இந்தி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பிற்காக மும்பை சென்றிருந்தேன். அப்போது என்னிடம் பேசிய பெண் ஒருவர் இங்கு ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு தான் கிடைக்கும் என்றார்.
மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!
ஆனால், அதற்கு கூட நீங்கள் தகுதியானவராக என்னக்கு தெரியவில்லை என்றார். காரணம் நீங்க ரொம்ப டஸ்கி காலரா இருக்கீங்க. இங்கு நல்ல வெள்ளையாக, மிகவும் அழகாக, கூடுதலான கவர்ச்சியோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பும் கிடைக்கும் என முகத்தில் அடித்தாற்போன்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பின்னர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு எனக்கு உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு மெயில் செய்தேன்.
அதற்கு உடனே ரிப்ளை செய்த அவர் உங்களின் முந்தைய படங்களின் காட்சிகள் சிலவற்றை அனுப்புங்கள் என கேட்டதும் நானும் அனுப்பினேன். ஆனால் அதன் பின்னர் பதில் வரவில்லை. எனவே அவ்வளவு தான் என நினைத்துக்கொண்டு நான் நம்ம ஊருக்கே திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் அவ்வப்போது கிடைத்து கிடைத்த தமிழ் படங்களில் நடித்து வந்தேன். அப்போது தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கைக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் பெரிய அளவில் பேசப்பட்டேன். அந்த படத்தை பார்த்து அனுராக் காஷ்யாப் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!
இந்நிலையில், தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி வாய்ப்பிளக்க வைக்கும் படியான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். காயத்ரி சங்கர் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரிடம் மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அதிக முறை விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறீர்கள். அப்படி என்றால், விஜய் சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதா அல்லது ஜோடியாக நடித்தால் ஹிட் ஆகிறதா என்று தோன்றுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, காயத்ரி இரண்டுமே கிடையாது என்று நினைக்கிறேன். அது இயக்குனர் தயாரிப்பாளர்களின் முடிவால்தான் என்று கூறி இருக்கிறார். மேலும், நீங்கள் நடித்தால் படங்கள் ஹிட் ஆகிடுமா என்ற கேள்விக்கு நான் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் கிடையாது. நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அதற்கு காரணம், சிறந்த இயக்குனர்களின் படங்களின் நடித்துள்ளேன். அதிலும், விஜய் சேதுபதி என்னோட சிறந்த கோ ஸ்டார் என தெரிவித்துள்ளார்.
0
0