அஜித்துக்கு சவால் விடும் பாலா… பழைய பகையை தீர்க்க போட்ட ஸ்கெட்ச்சா..!

Author: Selvan
29 November 2024, 7:29 pm

வணங்கான் vs விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களத்தை கொடுப்பவர் இயக்குனர் பாலா.இவர் இயக்கிய நான் கடவுள் படத்தில் முதலில் நடிகர் அஜித் நடிப்பதாக இருந்தது.

Bala Challenges Ajith with Arun Vijay Movie

அதற்காக அஜித் தாடி எல்லாம் வளர்த்தார்.ஆனால் அஜித் இயக்குனர் பாலாவிடம் முழு கதையை சொல்ல முடியுமா என கேட்க,அதற்கு அவரோ நான் முழு கதையை யாரிடமும் சொல்லுவதில்லை என்று கூறியுள்ளார்.உடனே நடிகர் அஜித் அப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.இதன் பின்பு இருவரும் சேர்ந்து எந்த படமும் பண்ணவில்லை.

இதையும் படியுங்க: திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய SK…! என்னவா இருக்கும்..?

இந்த நிலையில் இயக்குனர் பாலா தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்துள்ளார்.முதலில் இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகி பட ஷூட்டிங் வேலைகளும் ஆரம்பித்தது,ஆனால் ஓரிரு நாளில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் செட் ஆகாததால் படத்தில் இருந்து விலகினார்.

Bala Vanangaan Movie Release Pongal 2025

பொங்கல் விருந்து யாருக்கு ?

தற்போது இந்த படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.அதே பொங்கல் அன்று அஜித்தின் விடாமுயற்சி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

அருண் விஜய் தீவிர அஜித் ரசிகர்.. இருந்தாலும் இயக்குனர் பாலா அஜித்துடன் போட்டி போட உள்ளார்.

வணங்கான் படத்தை வெளியிட்டு அஜித்தின் பழைய பகைக்கு சவால் விடுகிறார் பாலா,என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!