நெப்போலியன் மகன் திருமணம்; பயில்வான் சொன்ன ரகசியம்; இப்படிப்பட்டவரா நெப்போலியன்?..

Author: Sudha
13 ஜூலை 2024, 11:12 காலை
Quick Share

தமிழ் சினிமா துறையில் 80 மற்றும் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன்.ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். அவருடைய நடிப்பில் வெளிவந்த சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, தசாவதாரம் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் நிச்சயதார்த்த விழா சில தினங்களுக்கு முன்பு வீடியோ காலில் நடைபெற்றது. இடைத்தொடர்ந்து அவருடைய திருமணத்திற்காக நெப்போலியன் சில விஷயங்களை செய்யப் போவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் சொல்லியுள்ளார். தன்னுடைய மகனின் திருமணத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார் எனவும் கூறி இருக்கிறார்.

அவர் கூறுகையில் தனுஷிற்கு இப்போது 25 வயதாகிறது அவருக்கு திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த விவேகானந்தன் என்பவருடைய மகள் அக்ஷயாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. மணப்பெண் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் திருநெல்வேலியின் வழக்கப்படி மணமகள் வீட்டிற்கு வந்து தான் மணமகன் திருமணம் செய்ய வேண்டும்.

ஆனால் மணமகன் தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பலில் தான் பயணம் செய்து வர வேண்டும். எனவே சொகுசுக் கப்பலில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை நெப்போலியன் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கிசு கிசுக்களில் சிக்காமல் வாழ்ந்த நல்ல நடிகர் நெப்போலியன் எனவும் பயில்வான் சொல்லியுள்ளார்.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 204

    0

    0